Tuesday 17 January 2012

கள்ளிபாலேனும் கிடைக்குமா?



வறண்டு கிடக்கு என் நாக்கு
என் தாயின் மார்பை போலவே!!

 உடம்பின் ஒவ்வொரு இயக்கமும்
மூளையின் செயல்பாட்டில் நிகழும்
என்பதால்தான் பசிக்க வில்லை
எனக்கு!!
ஏனெனில்
பசியை உணரும் அளவிற்கு
மூளைக்குத் தெம்பு இல்லை!!

ஊண் உண்டு வாழ வேண்டும்
என்ற நியதியைப் படைத்த
இறைவா
பின்பு என்னை ஏன் படைத்தாய்?

நீ தந்த வாழ்வு இங்கே,
எனக்கான உணவு எங்கே?

ஒரு துளி கிடைக்குமா?
கள்ளிப் பாலாய் இருந்தாலும்
ஒரு துளி கிடைக்குமா எனக்கு?

அன்புடன்,
கோகிலா கன்னியப்பன்.

1 comment:

  1. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கான உணவு படைக்கப்பட்டிருக்கும் என்று எழுதியவர்களே,எங்கே எனக்கான உணவு?

    ReplyDelete