Tuesday 17 January 2012




புதைகுழிக்குள் என் கண்மணி
சுருண்டு கிடக்கிறாளே!!!

நோய் கண்டு மடிந்திருந்தால்
மார்தட்டி கதறி அழுதிருப்பேன்.
விபத்தொன்றில் முட்டி
இறந்திருந்தால்,
கால தேவனைச் சபித்து
சமாதானம் அடைந்திருப்பேன்.
பசியுண்டு மடிந்தாளே - மகளே
யாரைப் பழிச் சொல்லி
அழுவேன் நானே?

எட்டி நின்று உச்சுக் கொட்டும்
மனிதர் தம் மேன்மை கண்டு
கொந்தளிக்கவோ?
வயிறு முட்ட உண்ட பின்பும்
வாழ்வை வெல்லும் திராணி இல்லா
மனிதர் தம் வலிமைக் கண்டு
குமுறவோ?

என் செய்வேன் நான்?

புதைகுழிக்குள் என் கண்மணி
சுருண்டு கிடக்கிறாளே!!!

இறைவா,
தினம் நீ நீராடும் பாலில்
ஒரு துளி போதுமே
என் மகள் வாழ்ந்திருப்பாளே!!
பாலில் உன்னை நனைத்த
மனிதர்- என் பெண்ணைப்
புதைத்தனரே?

நீ என் செய்வாய்!!

உன் கரங்களை மனிதர்க்குக்
கொடுத்து விட்டு
கையலாகாதவன் ஆனாய்!!

உன் கால்களை மனிதர்க்குக்
கொடுத்து விட்டு முடமானாய்!!

இதழ்களைத் தந்து விட்டு
மெளனமானாய்!!

இறைவா,
இதயத்தினை மட்டும் உன் வசம்
வைத்துக் கொண்டதால்
நீ இறையானாய்!!
இதயமற்ற மனிதன் மத்தியில்
என்னைப் போல்
நீயும் இரையானாய்!!!

என் வறண்ட பூமி
வளம் பெறுமாயின்
வாய்க்கரிசி போடும்
வழக்கத்தைத் தடை விதிப்பேன்
அன்று.

வாயுள்ள மனிதனுக்குப் போய்
சேரட்டும் அவை
உயிரூட்டும் சோற்றுப் பருக்கைகளாய்!!!

 
அன்புடன்,
கோகிலா கன்னியப்பன்

10 comments:

  1. இறையானவன் இரையானதால் தானோ உலகில் இத்தனை ஏற்ற,இறக்கங்கள் ...

    ReplyDelete
  2. ///என் வறண்ட பூமி
    வளம் பெறுமாயின்
    வாய்க்கரிசி போடும்
    வழக்கத்தைத் தடை விதிப்பேன்
    அன்று.

    வாயுள்ள மனிதனுக்குப் போய்
    சேரட்டும் அவை
    உயிரூட்டும் சோற்றுப் பருக்கைகளாய்!!!///

    நிச்சயமாய் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய வரிகள்!

    ஆனால் இவ்வுலகில் அமெரிக்காவைப் பார்த்து அதிசயப்படும் அதே நேரத்தில் சோமாலியா பற்றி யாரும் கவலைப்பட தயாராய் இருப்பதில்லை!

    ReplyDelete
  3. நிலவன்பன் : உங்களின் கருத்துகளுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்:-)

    ReplyDelete
  4. சிந்திக்க வேண்டிய உயிரோட்டம் நிறைந்த பதிவுகள்..தொடரட்டும் உங்கள் சேவை...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  5. இதைப் படித்தப் பிறகு அடுத்தவேளை நிம்மதியாக யாராலும் சாப்பிட முடியாது. அதுவும் இந்த ஒளிப்படத்தைப் பார்த்தால் நிம்மதியாக உறங்கவும் முடியாது. இவற்றைத் தடுக்க நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நொந்துக்கொள்ள தான் முடியும்!

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. சகோதரியின் எழுத்துகள் சிந்திக்கமாட்டும் அல்ல உணர்சிகளையும் தூண்டிவிட்டது .,
    என்னிடம் வார்த்தைகள் ஏதும் இல்லை கருத்து கூற :
    https://www.facebook.com/photo.php?v=138880049551781
    ----------------------------------------------------------
    ARUN.R
    https://www.facebook.com/arun.arasu.7
    Email id : r.arunmla@gmail.com
    Website : WWW.YASI.ORG.IN

    ReplyDelete