Friday 17 February 2012

இதயமா? வெறும் இயந்திரமா?

வாழ்வினைத் தொலைத்து விட்டு
வானம் நோக்கி பயணம் போகும்
இயந்திர வாழ்வினில்
நானும் ஓர் அங்கமா?
உலகம் என்ற பிரபஞ்சம்
தன்னுள் சுருங்கி
நான் என்ற ஒற்றைச் சொல்லில்
முடிந்து விடுகின்றது
இந்த கலியுக வாழ்க்கை.
ஒடிந்து விடும் நிலையில்
உறவுகள் மெலிந்து விடுகின்றன.
இதயம் வெறும் இயந்திரமான
வேளையில்
ஊதாரித்தனமாக உணர்வுகளை
செலவழிக்க பலர் விரும்புவதில்லை..
மனிதன் மரக்கட்டையான நொடியில்
வெண்ணிலவு வெறும் வேற்று கிரகமாயிற்று!
தவறாய் உரைத்து விட்டேனா?
மரக்கட்டைக்குக் கூட கொஞ்சம்
உணர்வு உண்டோ?

2 comments:

  1. ஊதாரித்தனம்மாக உணர்வுகளை செலவழிக்க விரும்புவதில்லை...நிதர்சனம்.இயந்திர வாழ்க்கை ஓட்டத்தில் இங்கே உணர்வுகளுக்கான இடம் சுருங்கிவிட்டது .

    ReplyDelete
  2. உங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி :-)

    ReplyDelete