Saturday, 18 February 2012

சில மெளனங்கள் வார்த்தைகளாய்!!

நாகரீகம் பார்த்து கூறாமல்
விட்டுப் போன வார்த்தைகள்
அவப்பொழுது கொடுக்கின்றன
சாட்டை அடிகள்..
ஏனென்று தெரியாமல்
என்னவென்று புரியாமல்
புழுங்கி துடித்து
பின்னொரு நாள்
எதுவும் நமக்கு சாதகமானது இல்லை
என்றான பின்,
கண்ணீர் சொரிந்து
காலம் இழுத்துச் செல்ல
அவப்பொழுது ஏக்கமாய்
திரும்பி பார்த்து
மீண்டும் பயணித்த போதும்
நாகரீகம் பார்த்து கூறாமல்
விட்டுப் போன வார்த்தைகள்
அவப்பொழுது கொடுக்கின்றன
சாட்டை அடிகள்..
சில மெளனங்களை
நிரப்பி இருந்தால்??

1 comment:

  1. சில மெளனங்களை நிரப்பி இருந்தால்...சாட்டைஅடிகள் இடம்மாறி இருக்குமோ?

    ReplyDelete